காசியின் அற்புதம் :
சம்புரீச: பசுபதி: சிவ;
சூலி மஹேஸ்வர:
ஈஸ்வர: சர்வ ஈசான:
சங்கர: சந்த்ர சேகர:
பிரசாத சிறப்புகள்:-
வென் பொங்கல் ------ காரிய சித்தி
புளி சாதம் ------ வியாதி குணமாகும் காரிய வெற்றி
தேங்காய் சாதம் ------ லக்ஷ்மி கடாட்சம்
மிளகு சாதம் ------ தொழில்மேன்மை
எலுமிச்சை சாதம் ------ எதிரிகள் குறையும்
கற்கண்டு சாதம் ------ திருமணம் கைகூடும்
கொழுக்கட்டை ------ காரியத் தடை விலகும்
பாயாசம் ------ தான்ய விருத்தி, புத்திர விருத்தி
வடை மாலை ------ ஆரோக்கியம் சரீர பலன்
தயிர் சாதம் ------ ஜுவரம் நிவர்த்தி
பானகம் ------ காரிய சித்தி
பால் அன்னம் ------ ராஜ யோகம்
எள் சாதம் ------ பிதுர்தோஷம், சனி தோஷம் விலக
காசியில் கருடன் பறக்காதது ஏன்? :-
புனிதமாக போற்றும் காசிக்கு கருடன் பறக்காததற்கும், பல்லி ஓசை எழுப்பாமல் இருப்பதற்கும் காரணமானவர் {பைரவர்}.
ராவணனை வதம் செய்தபின் கடற்கரையில் சிவபூஜை செய்ய நினைத்தார் ஸ்ரீ ராமர். இதையடுத்து காசிக்குச் சென்று சிவலிங்கம் ஒன்று கொண்டு வருமாறு அனுமனுக்கு கட்டளை இட்டார். அனுமனும் காசிக்குச் சென்றார். அங்கு எங்கு பார்த்தாலும் சிவ லிங்கங்கள் இருந்தன. அந்த லிங்கங்களில் எந்த லிங்கம் 'சுயம்பு லிங்கம்' என்று புரியாமல் தடுமாறினார்.
அந்த நேரத்தில் அவருக்கு துணை செய்ய நினைத்தார் மஹா விஷ்ணு.
விஷ்ணுவின் அருளால் அவருடைய வாகனமான கருடன் ஒன்று பறந்து வந்தது. ஒரு குறிப்பிட்ட லிங்கத்துக்கு மேல் வட்டமடித்தது . பல்லியும் அதே நேரத்தில் நல்லுரை சொல்வது போல ஒலித்தது.
இந்த இரண்டு குறிப்புகளையும் புரிந்து கொண்ட அனுமன் அந்த லிங்கம் தான் 'சுயம்பு லிங்கம்' என்று உணர்ந்து அந்த சிவலிங்கத்தைப் பெயர்த்துக் கொண்டு தெற்கு நோக்கிப் பறந்தார்.
காசிக்கு காவல் தெய்வம் பைரவர். எட்டு பைரவர்கள் காசி நகரின் எட்டு திசைகளிலிருந்து காவல் செய்வதாக ஐதீகம். சிவ லிங்கத்துடன் வந்த அனுமனைத் தடுத்த பைரவர் 'என்னுடைய அனுமதி இல்லாமல்
காசியில் இருக்கும் லிங்கத்தை நீ எப்படி பெயர்த்துச் செல்லலாம்'? என்று கேட்டார்.
அனுமன் பைரவரைப் பற்றி சற்றும் கவலைப் படாமல் 'என் தெய்வமான ராமபிரானின் உத்தரவு இது. அதனால் எடுத்துக் கொண்டு செல்கிறேன்' என்றார்.
அனுமனின் பதிலால் கோபமான பைரவர் அனுமனுடன் சண்டையிட்டார். இருவருக்கும் கடும் போர் நடந்தது. வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க முடியாமல் அந்த போர் அமைந்தது. அவர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொல்வதைக் கண்ட முப்பத்து முக்கோடி தேவர்களும் கவலையில் ஆழ்ந்தார்கள். அவர்களுள் சிலர் காசி நகரை
நோக்கி விரைந்தார்கள், கால பைரவரை வணங்கினார்கள்.
'சுவாமி உலக நன்மைக்காக இந்த சிவ லிங்கத்தை எடுத்துக் கொண்டு தென்னாடு போக அனுமனுக்கு அனுமதி தர வேண்டும். ராமபிரான் இந்த லிங்கத்துப் பூஜை செய்வதற்காக சேதுவில் காத்திருக்கிறார். எனவே அனுமனை அனுமதிக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்கள்.
இதையடுத்து அமைதியான பைரவர், சுயம்பு லிங்கத்தை ராமேஸ்வரத்திற்கு எடுத்துச் செல்ல அனுமனுக்கு அனுமதி வழங்கினார். அவரும் சுயம்பு லிங்கத்துடன் ராமேஸ்வரம் நோக்கி பறந்தார்.
இந்த சம்பவத்தின் படி அனுமனுக்குச் சரியான லிங்கத்தை அடையாளம் காட்டியது கருடனும், பல்லியும் இதை அறிந்த பைரவர், அனுமனுக்குத் துணை புரிந்த கருடன் இனிமேல் காசி நகர எல்லைக்குள் பறக்கக் கூடாது என்றும், காசியில் பல்லிகள் இருந்தாலும் அவை ஒலிக்கக் கூடாது என்றும் கட்டளையிட்டார்.
அதன்படிதான் காசியில் இன்றும் கருடன் பறப்பதில்லை. பல்லி ஒலிப்பதில்லை. இந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் காசி நகரைச் சுற்றி 45 மைல் பரப்பளவில் கருடன் பறப்பதில்லை என்கின்றார்கள்.
புத்திர் பலம் யசோ தைர்யம்
நிர்பயத்வ மரோகதா
அஜாட்யம் வாக் படுத் வம்ச
ஹனூமத் ஸ்மரணாத் பவேத்
Comments
Post a Comment