வலம்புரி சங்கின் மகிமை

                                                         
                                                       
                                                   
                                                           வலம்புரி சங்கு:
                                                   
                                                           

                                                             



வலம்புரிச்  சங்கு இருக்கும் இடத்தில் எந்த தீய சக்தியும் அணுகாது!  பிரணவ மந்திரத்தின் அடையாளமாக புனிதப் பொருளாக வலம்புரி சங்கு கருதப்படுகிறது.

ஆயிரம் இடம்புரி சங்கில் ஒரேயொரு வலம்புரி  சங்குதான் இருக்கும்.
 
வலம்புரிச் சங்கை காதில் வைத்துக் கேட்டால் அது 'ஓம்' என்ற சப்தத்தை எழுப்பும்.  இதுவே அந்தச் சங்கு வழிபாட்டுக்குரியது என்பதைத் தெரிவித்து    விடும்.

அமிர்தம் வேண்டி தேவ அசுரர்கள் பாற்கடலைக் கடைந்த போது வெளிவந்த பதினாறு வகை தெய்வீகப்  பொருட்களில் 'வலம்புரி' சங்கும் ஒன்று. 


வலம்புரிச் சங்கு 'தட்சிணாவர்த்த சங்கம்' என்றும், இடம்புரி சங்கு 'வாமா
வர்த்த சங்கம்' என்றும் சொல்லப்படுகிறது.

தமக்கு வில் வித்தை கற்றுத் தந்த 'சாந்தீபனி' முனிவரின் மகனை மீட்க கடலில் வாழ்ந்த 'பாஞ்சஜன்யன்' அசுரனை ஸ்ரீகிருஷ்ணர்  கொன்றார்.  சாகும் தருவாயில் கிருஷ்ணரைப் பணிந்த அந்த அரக்கனின் வேண்டுகோளின்படி அவனது சாம்பலை திரட்டி சங்காக மாற்றி அவனது பெயரிலேயே ஏந்திக் கொண்டார் என்று பாகவத புராணம் கூறுகிறது.

மஹா பாரதத்தில் பாண்டவர்கள் ஐவரும் ஐந்து விதமான சங்குகளை தாங்கி இருந்ததாக சொல்லப்படுகிறது.

யுதிஷ்டிரர் (தர்மர்) 'அனந்த விஜயம்' எனும் ஒளி பொருந்திய சங்கையும்
அர்ஜுனன் 'தேவதத்தம்' எனும் தேவ சங்கையும், பலவான் பீமன் 'மஹா சங்கன்' எனும் பெரிய சங்கையும், நகுலன் 'சுகோஷம்' எனும் அதிஷ்ட சங்கையும், சகாதேவன் 'மணிபுஷ்பகம் 'எனும் சூட்சும சங்கையும் தாங்கி    இருந்தார்கள் என்று சொல்லப்படுகிறது.

சங்கு மஹா லக்ஷ்மியின் அம்சமாகவே பார்க்கப்பட்டு வருகிறது.  இது இருக்கும் இடத்தில் தோஷங்கள், துஷ்ட சக்திகள், கண் திருஷ்டி, பகைவர்களின் நீச செயல் எதுவுமே பலமிழந்து போகும்.  கடன்  பிரச்சனைகள், வாஸ்து தோஷங்கள் நீங்கும்.

சங்கால் அபிஷேகம் செய்தால் பத்து மடங்கு அபிஷேகம் செய்த பலனை பெறலாம் என்பது ஐதீகம்.  இது இருக்கும் இடத்தில் உணவு பஞ்சம் வராது.  வலம்புரி சங்கு பூஜை செய்பவர்களுக்கு ப்ரம்ம தோஷம்  விலகி விடும்.

வலம்புரி சங்கை  கீழே வைக்கக் கூடாது.  ஒரு பித்தளை தட்டில் அரிசி வைத்து அதன் மீது சங்கு வைக்க வேண்டும்.

கணபதி, வலம்புரி சங்கு, சாளக்கிராமம், ருத்திராச்சம், இந்த நான்கும் இருக்கும் இடம் தெய்வ சந்நிதிக்கு நிகரானது என்பது ஆன்றோர் வாக்கு.

அதிக கடன் பட்டவர்கள் பௌர்ணமி தோறும் சங்குக்கு குங்கும அர்ச்சனை செய்துவர உடனே கடன் தீரும்.

செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய் தோறும் வலம்புரி சங்கில் பால் வைத்து அங்காரக பூஜையை செய்ய தோஷம் விலகி திருமணம் நடந்து விடும்.

குபேரனையும், லட்சுமி தேவியையும் நினைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை கூறி சங்கை வழிபடுவது நல்லது. 

'ஓம் பாஞ்ச ஜன்யாய வித்மஹே 
பவமானாய தீமஹி 
தந்நோ சங்க ப்ரசோதயாத்"!.  

ஆன்மீகப் பொக்கிஷத்தில் பக்தியைப்  போற்றி பாதுகாப்பதில் ஆன்மீகத்தில் சங்குகள் முன்னணியில் நிற்கின்றன.

திருப்பதி பெருமாள் 'மணி சங்கு' கொண்டிருக்கிறார்.  இவரைப் போன்றே
திருவனந்தபுரம் ஸ்ரீ அனந்த பத்மநாப ஸ்வாமி 'பாருத சங்கும்', திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் 'வைபவ சங்கும்', திருக்கண்ணபுரம் ஸ்ரீ சௌரிராஜா பெருமாள் 'துயிலா சங்கும்' கொண்டு
திகழ்கிறார்கள். 


"பாஞ்ச ஜன்யாய வித்மஹே 
சங்க ராஜாய தீமஹி 
தந்நோ சங்க ப்ரசோதயாத்" 

 







Comments

Popular posts from this blog

சகல நன்மைகளும் வழங்கும் சாளக்கிராம மந்திரங்கள்:-

ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி:-