ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி:-
ஸ்ரீ நரசிம்ம காயத்ரி :-
ஓம் வஜ்ர நாகாய வித்மஹே
தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி
தந்நோ நரஸிம்ஹப ப்ரசோதயாத்
ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி :-
காக்கும் கடவுளான விஷ்ணுவின் நான்காவது அவதாரமே ஸ்ரீ நரசிம்மஅவதாரம் ஆகும். சிங்க தலையுடனும்,மனித உடலுடனும் இந்த அவதாரத்தை எடுத்த மஹாவிஷ்ணு, இரண்யகசிபு எனும் அரக்கனை வதம் செய்தார்.
துன்பக் கடலில் பலர் தவிப்பதை கண்டு நாமும் கூட சில நேரங்களில் துடித்து போவோம். அந்த அளவிற்கு சிலரின் துன்பங்கள் உச்சத்தில் இருக்கும். அத்தகைய பெரும் துன்பத்தில் இருந்து ஒருவரை விடுவிக்க நரசிம்மரால் நிச்சயமாக முடியும். பிரகலாதனை பெரும் துயரத்தில் இருந்து காத்தவர் அவர் அல்லவா.
இத்தகைய அற்புதம் வாய்ந்த ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி இந்த வருடம் சித்திரை மாதம் 15 - ம் நாள் [28 -4 -2018 ] சனிக் கிழமையன்று வருகின்றது.
ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி விரதம்;
அறிந்தோ, அறியாமலோ செய்த பாவங்களால் வரும் தண்டனையில் இருந்து விடுபட லட்சுமி நரசிம்மரை வழிபட வேண்டும்.
ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி அன்று அதிகாலை குளித்து வீட்டை சுத்தம் செய்து பூஜையறையில் சுவாமி படத்திற்கு முன்பு விளக்கேற்றி வழிபட வேண்டும். அன்று பகல் முழுவதும் உணவின்றி நீராகாரமாக பருகி, நரசிம்மர் ஸ்தோத்திரத்தை கூறி வழிபடலாம். அன்று மாலை 4 .30 முதல் 7 .30 மணிக்குள் வழிபட வேண்டும். விஷ்ணு வழிபாட்டில் பயன்படுத்தும் மலர்கள் வஸ்திரம், நைவேத்யம் ஆகியவற்றை உபயோகிக்க வேண்டும். செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து, சக்கரைப் பொங்கல், அல்லது பானகம் ஏதாவது ஒன்றை நைவேத்தியம் செய்யலாம்.
ஸ்ரீ மந்த்ரராஜபத ஸ்தோத்ரம்:
[ஸ்ரீ ருத்ரன் ஸ்ரீ லட்சுமி நரசிம்மனைக் குறித்து சொன்ன ஸ்தோத்திரம்.]
அற்புதமான இந்த ஸ்லோகம் ஸ்ரீ பரமேஸ்வரனால் ஸ்ரீ பார்வதி தேவிக்கு உபதேசம் செய்யப்பட்டது.
அளவற்ற சக்தி வாய்ந்தது.
நரசிம்மர் படத்தை பூஜை அறையில் கிழக்கு நோக்கி வைக்க வேண்டும்.
தினமும் குளித்து விட்டு நரசிம்ம பிரபத்தி ஸ்லோகத்தை 3 ,12 ,28 என
பாராயணம் செய்ய வேண்டும்.
ஸ்ரீ நரசிம்ம ப்ரபத்தி:
மாதா நரசிம்ஹ : பிதா நரசிம்ஹ:
ப்ராதா நரசிம்ஹ; ஸகா நரசிம்ஹ :
வித்யா நரசிம்ஹ: த்ரவிணம் நரசிம்ஹ:
ஸ்வாமி நரசிம்ஹ: சஹலம் நரசிம்ஹ:
இதோ நரசிம்ஹ; பரதோ நரசிம்ஹ;
யதோயதோ நரசிம்ஹ: ததோ நரசிம்ஹ:
நரசிம்ஹ தேவாத் ப்ரோ ந கஸ்சித்
தஸ்மான் நரசிம்ஹ சரணம் ப்ரபத்யே!
இந்த ஸ்லோகத்தை சொல்லி நரசிம்மரின் முன் விளக்கேற்ற வேண்டும்.
காய்ச்சி ஆற வைத்த பசும்பால் அல்லது பானகத்தை நைவேத்தியம் செய்ய வேண்டும். இந்த ப்ரசாதத்தை குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட வேண்டும். கைமேல் பலனளிக்கும் சக்தி வாய்ந்த ஸ்லோகம் இது. இதை முறையாக கடைபிடித்தால் 48 நாட்களுக்குள் எண்ணிய செயல் கைகூடும். பின்னர் நரசிம்மர் கோவிலுக்கு சென்று, ஸ்வாமிக்கு நெய் தீபம் ஏற்றி துளசி மாலை சாற்றி வழிபட வேண்டும்.
இதனால் கடன் சுமை குறையும். நோய் குணமாகும். திருமணத் தடை
அகலும். குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு, வேலையில் இடைஞ்சல் அகலும்.
ஸ்ரீலட்சுமி நரசிம்மனின் பெருமையை விளக்கும் இந்த ஸ்லோகத்தை இரவில் படுக்க போகும் முன்பு கை, கால்களைக் கழுவிக் கொண்டு தினமும் படித்து வந்தால் தீர்க்க முடியாது என்று கைவிடப்பட்ட நோய்கள் குணமாகும். மன நோய்க்கு அறிய மருந்தாகும். இந்த மந்திரராஜபத ஸ்தோத்திரம்.
ஓம் நரசிம்மாய வித்மஹே
வஜ்ர நகாய தீமஹி
தந்நோ நரசிம்ஹப ப்ரசோதயாத்!
Comments
Post a Comment