பிரதோஷத்தின் சிறப்புகள்:-


                                                             
 
                                                           





                                                                 

                                                 
பொன்னார் மேனியனே புலித்
தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்
கொன்றை யணிந்தவனே!!


கிழமைகளில் வரும் பிரதோஷத்தின் பயன்கள் மற்றும் பலன்கள்:-

ஞாயிறு பிரதோஷம்:-

சூரிய திசை நடப்பவர்கள் ஞாயிறு அன்று வரும் பிரதோஷத்திற்கு கண்டிப்பாக செல்ல வேண்டும்.

பலன்:-  இதனால் சூரிய பகவான் அருள் நமக்கு கிடைக்கும்.  இந்த திசையில்  வரும் துன்பம் விலகும்.  பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.


திங்கள் பிரதோஷம்:-

பிரதோஷத்தில் சோமவாரம் [திங்கள்] பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.  சந்திர திசை நடப்பவர்கள் சந்திரனை லக்கினாதிபதியாக கொண்டவர்கள்.  திங்கள் அன்று வரும் பிரதோஷத்திற்கு செல்ல வேண்டும்.

பலன்:-  மன நிம்மதியும், மகிழ்ச்சியும் கிட்டும்.  மன வலிமை பெருகும். 

செவ்வாய் பிரதோஷம்:-

செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாயை லக்கினாதிபதியாக கொண்டவர்கள் செவ்வாய் அன்று வரும் பிரதோஷத்திற்கு செல்ல வேண்டும்.  மனிதனுக்கு வரும் ரூனம் மற்றும் ரணத்தை நீக்க கூடிய பிரதோஷம் ஆகும்.

பலன்:-  செவ்வாய் வரும் பிரதோஷம் பித்ரு தோஷம் நீங்கும்.  கடன் தொல்லை தீரும்.  எந்த ராசி நட்சத்திரத்தை உடையவராக இருந்தாலும் ஒரு செவ்வாய் பிரதோஷமாவது வைத்தீஸ்வரன் கோவில் சென்று சித்தா மிர்த தீர்த்தத்தில் பிரதோஷ வேளையில் நீராடி வைத்தியநாத ஸ்வாமியை வழிபட்டால் அவர்களுக்கு வரும் ருனமும்,ரணமும் நீங்கும் என்பது சிவ வாக்கு. 

புதன் பிரதோஷம்:-

புதன் திசை நடப்பவர்கள் புதனை லக்கினாதிபதியாக கொண்டவர்கள் புதன் அன்று பிரதோஷத்திற்கு செல்ல வேண்டும்.

பலன்:-  புதனால் வரும் கெடு பலன் நீங்கும்.  கல்வி சிறக்கும்.  அறிவு வளரும்.  படிக்காத பிள்ளை படிக்கும்.  பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தவறாமல் புதன் அன்று வரும் பிரதோஷத்திற்கு அழைத்து செல்ல வேண்டும்.  இதனால் அவர்கள் கல்வி சிறக்கும்.  தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவார்கள்.  

வியாழன் பிரதோஷம்:-

 குரு பார்க்க கோடி நன்மை.  குரு திசை நடப்பவர்கள், குருவை லக்கினாதிபதியாக கொண்டவர்கள், வியாழலன் அன்று வரும் பிரதோஷத்திற்கு செல்ல வேண்டும்.

பலன்:-  கிரக தோஷத்தால் ஏற்படும் தீமை குறையும். 

வெள்ளி பிரதோஷம்:-

சுக்ர திசை நடப்பவர்கள், சுக்கிரனை லக்கினாதிபதியாக, கொண்டவர்கள்  வெள்ளி அன்று வரும் பிரதோஷத்திற்கு செல்ல வேண்டும்.

பலன்:-  உறவு வளப்படும்.  சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும். 

சனி மஹா பிரதோஷம்:-

சனி பிரதோஷம் என்று கூற மாட்டார்கள் சனி மஹா பிரதோஷம் என்றே கூறுவார்கள்.  ஏன் என்றால் அத்தனை சிறப்பு வாய்ந்தது சனி மஹா பிரதோஷம்.  எந்த திசை நடந்தாலும் சனி பிரதோஷம் அன்று கோவிலுக்கு சென்று சிவனை வழிபடுவது சிறப்பு.  ஏழரை சனி, அஷ்டம சனி நடப்பவர்கள், சனியினால் வரும் துன்பத்தை போக்க கண்டிப்பாக சனி பிரதோஷத்திற்கு செல்ல வேண்டும்.

பலன்:-  ஒரு சனி பிரதோஷம் சென்றால் 120  வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும்.  கிரக தோஷத்தால் ஏற்படும் தீமை குறையும்.  பஞ்சமா பாவமும் நீங்கும்.  சிவ அருள் கிட்டும். 

கண்டிப்பாக செல்ல வேண்டிய பிரதோஷங்கள்:-
வருடத்திற்கு வரும் 24 பிரதோஷத்திற்கு போக முடியாதவர்கள் சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வரும் 8  பிரதோஷத்திற்கு செல்ல வேண்டும்.  இந்த 8 பிரதோஷத்திற்கு சென்றால் ஒரு வருடம் பிரதோஷத்திற்கு சென்ற பலன் கிடைக்கும்.

தேய்பிறையில் வரும்  சனி பிரதோஷம்:-
மிகவும் சிறப்பு வாய்ந்தது.

அவரவர் நட்சத்திரம் அன்று வரும் பிரதோஷம்:- கவலை தீரும். 

ப்ரபும் ப்ராண நாதம் விபும் விஷ்வ‌ நாதம் ஜகன்நாத நாதம் ஸதானந்த‌ பாஜாம் |
பவத்பவ்ய பூதேஷ்வரம் பூதநாதம், சிவம் சங்கரம் ஷ‌ம்பு மீஷானமீடே
||

    

Comments

Popular posts from this blog

சகல நன்மைகளும் வழங்கும் சாளக்கிராம மந்திரங்கள்:-

ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி:-

வலம்புரி சங்கின் மகிமை