சிவபெருமானின் சிறப்பு
தலைப்பாகை சூடும் சிவபெருமான் :-
திருநெல்வேலி மாவட்டம் விக்கிரம சிங்கபுரம் பகுதியில் உள்ளது சிவந்தியப்பர் கோவில். இத்தலத்தில் உள்ள சிவபெருமான் தலையில் தலைப்பாகை கட்டிய நிலையில் காட்சி தருகிறார்.
ஸ்வாமியின் திருநாமம்: சிவந்தியப்பர்
அம்பாளின் திருநாமம்:- வழியடிமை கொண்ட நாயகி
ஸ்தல விருட்சம்:- வில்வ மரம்
ஸ்தல தீர்த்தம்:- வாண தீர்த்தம் [ பாண தீர்த்தம்]
இத்தலத்தில் வள்ளி-தெய்வானை இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நிற்பது விசேஷமானது.
இத்தலத்தில் இருக்கும் தட்சிணாமூர்த்தி தன் இடது கையை காலுக்கு கீழ் இருக்கும் நாகத்தின் தலை மீது வைத்தபடி இருப்பது வித்தியாசமான
அமைப்பாக உள்ளது. [பொதுவாக தட்சிணாமூர்த்தி இடது கையில் ஏடு அல்லது அக்னியை ஏந்திய படிதான் காட்சி தருகிறார்].
காலை 6 .௦௦ மணி முதல் 9 .௦௦ மணி வரையிலும்,மாலை 5 .௦௦ மணி முதல் இரவு 8 .30 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
திருநெல்வேலியில் இருந்து பாபநாசம் செல்லும் வழியில் வி.கே.புரம்
[விக்கிரமசிங்கபுரம்] உள்ளது.
Comments
Post a Comment