சித்ரா பௌர்ணமி விரதம்
நவகிரங்களில் ராஜ கிரகங்களான சூரியனும், சந்திரனும் பலம் பெரும் நாள் தான் "சித்ராபௌர்ணமி".
மாதங்களில் முதல் மாதமாக வருவது சித்திரை. அதில் சூரியன் வரும் பொழுது ஆண்டு தொடங்குவதாகப் பஞ்சாங்கம் அறிவிக்கின்றது. அந்த சித்திரை மாதத்தில் சூரியன் உச்சம் பெறுகிறார். அந்த மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று சந்திரன் முழுமையடைகின்றார்.
இத்தகைய சிறப்பு மிக்க சித்ராபௌர்ணமி விளம்பி வருடம் சித்திரை மாதம் 16 -ம் நாள் [29 -4 -2018 ] ஞாயிற்றுக் கிழமை அன்று வருகிறது
பொதுவாக மனிதனின் வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்வது தெய்வ வழிபாடுகளும், விரதங்களும் தான். அந்த விரதங்களால் நிலவு நிறைந்த
நாளிலும், நிலவு மறைந்த நாளிலும் மேற்கொள்ளும் விரதங்கள் உடனடிப் பலனைத் தரும் என்பதை நாம் அனுபவத்தின் வாயிலாக உணர முடியும்.
சித்ரா பௌர்ணமி அன்று சித்ரகுப்தனை வழிபடலாம். நாம் செய்த பாவ புண்ணியங்களை பதிந்து வைக்கும் சித்ரகுப்தனை வழிபடும் நாளாக இந்த சித்ரா பௌர்ணமி அமைகின்றது. நாம் மலையளவு செய்தவேண்டும். பாவத்தை கடுகளவாகவும், கடுகளவு செய்த புண்ணியங்களை மலையளவாகவும் மாற்ற செய்யும்படி சித்ர குப்தனிடம் வழிபட வேண்டும்.
சித்ர குப்த காயத்ரி மந்திரம்:-
ஓம் தத் புருஷாய வித்மஹே
சித்ர குப்தாய தீமஹி
தந்நோ சித்ர குப்த ப்ரசோதயாத்
சித்ர பௌர்ணமி அன்று விரதம் இருந்து சிவபெருமானை வேண்டிக் கொண்டால் நினைத்தது நிறைவேறும். சிவனுக்கு அன்று சங்காபிஷேகம் செய்து வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
சிவ காயத்ரி மந்த்ரம்:-
ஓம் தத் புருஷாய வித்மஹே
மகா தேவாய தீமஹி
தந்நோ ருத்ர ப்ரசோதயாத்!!
சிவ ஸ்தோத்ரம்:-
நாகேந்திர ஹாராய த்ரிலோசனாய
பஸ்மாங்க ராகாய மஹேச்' வராய!
நித்யாய சு'த்தாயா திகம்பராய
தஸ்மை நகாராய நம: சி'வாய!!
சித்ரா பௌர்ணமி அன்று சத்ய நாராயண பூஜை செய்வது மிகவும் சிறப்பானது.
நாராயண காயத்ரி:-
ஓம் த்ரைலோக்ய மோஹனாய வித்மஹே
ஆத்மாராமாய தீமஹி
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்!
நாராயண ஸ்லோகம்:-
சாந்தா காரம் புஜங்க சயனம்,
பத்மநாபம் சுரேஷும்
விஷ்வதாரம் ககன சதுர்ஷம்,
மேக வர்ணம் ஸுபாங்கம்
லக்ஷ்மி காந்தம் கமல நயனம்
யோகிபிர் த்யான கம்யம்
வந்தே விஷ்ணும் பவ பய ஹரம்
சர்வ லோகைய நாதம்.
இவ்வாறு சித்ரா பௌர்ணமி அன்று நமக்கு பிடித்த தெய்வத்தை நினைத்து அந்த தெய்வத்திற்குரிய ஸ்லோகத்தை அன்று முழுவதும் சொல்லி விரதம் இருந்தால் நாம் நினைத்தது நிச்சயமாக நடக்கும்.
எந்தக் கிழமையில் சித்ரா பௌர்ணமி வருகின்றதோ, அந்த கிழமைக்கு உரிய கிரகத்தின் ஆதிபத்யமும், வழிபடுபவர்களுக்கு கிடைக்கும்.
சித்ரா பௌர்ணமி விரதம் ஆயுளை அதிகரிக்க செய்யும் ஆற்றல் உண்டு. மன அமைதி நிலவும்,வறுமை அகலும், திருமணத் தடை அகலும், புத்திர பாக்கியம் கிடைக்கும்.
Comments
Post a Comment