தெய்வீக சிந்தனை



                                                                   

 
 நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க

தெய்வங்களின் வாகனங்கள்:-

சிவன்                                             காளை
பிரம்மா                                         அன்னம்
விஷ்ணு                                       கருடன்                                               
காளி                                              கழுதை
கங்கா தேவி                               முதலை
லட்சுமி                                        ஆந்தை,யானை 
சரஸ்வதி                                    மயில், அன்னம் 
விநாயகர்                                   மூஞ்சுறு
முருகன்                                     மயில்
ஐயப்பன்                                     புலி
சுக்கிரன், வருணன்                 முதலை
இந்திரன்                                     யானை, குதிரை
காமதேவன்                              கிளி
வாயு தேவன்                           மான்
அக்னி தேவன்                        ஆடு
சூரியன்,சந்திரன்                    குதிரை
சனி பகவான்                           கழுகு, காகம்
கல்யாண ஆஞ்சநேயர்         ஒட்டகம்
குபேரன்                                    மனிதன்

ஸ்வாமிக்கு நைவேத்தியம் செய்யும் போது வெற்றிலைக் காம்பை கிள்ளிவிட்டு நுனியை இடது பக்கம் வருமாறு வைக்க வேண்டும்.  வெற்றிலையின் நுனியில் லக்ஷ்மியும், நடுவில் சரஸ்வதியும் வாசம்
செய்வதாக ஐதீகம். 

பலவித முருகன்:-

மேட்டுப்பாளையம் ஞானமலையில் ஐந்து முகங்களுடன் முருகப் பெருமான் கட்சி தருகிறார். 

ஆவூரில் உள்ள முருகப் பெருமான் கையில் தாமரை மலர் ஏந்தி உள்ளார்.

உத்திரமேரூரில் சடைமுடியுடன் கூடிய சண்முகனை காணலாம்.

திருப்போரூரில் சிங்க வாகனத்தில் செந்தில் வேலன் அருள்பலிக்கிறார்.

மருதமலையில் குதிரை மீது முருகப் பெருமான் காணப்படுகிறார்.

மந்திரகிரியில் சேவலை கையில் ஏந்தியபடி இருக்கும் செந்தில் ஆண்டவரை தரிசனம் செய்யலாம்.
 
திருக்குறுங்குடியில் வீற்றிருக்கும் கந்தனுக்கு மூன்று கண்கள் இருக்கின்றது.

காங்கேயம் ஐயப்பன் கோவிலில் மீன் மீது காட்சி தருகிறார். 


தேவியருடன் ஈசன்:-

கோவை மாவட்டத்தில் உள்ள தேவம்பாடிவலசு என்ற இடத்தில் உள்ள சிவன் கோவிலில் சிவபெருமான் தன் தேவியர்கள் இருவருடன் காட்சி தருகிறார்.  இந்த ஆலயத்தில் உள்ள கருவறையில் சிவபெருமான் அமர்ந்த  நிலையில் இருக்க அவரது இருபுறமும் பக்கத்திற்கு ஒருவராக பார்வதி தேவியும், கங்கா தேவியும் உள்ளனர்.  இவ்விதம் சிவபெருமான் இருவருடன் காட்சி அளிப்பது அபூர்வமான அமைப்பாகும்.

ஜடாமுடி சிவலிங்கம்:-
சிவனுக்கே உரித்தான ஜடாமுடியுடன் கூடிய சிவலிங்கத்தை திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகில் உள்ள சிவசைலம் சிவசைலநாதர் கோவிலில் மட்டும்தான் காண முடியும்.  லிங்கத்தின் பின்னால் உள்ள இந்த ஜடாமுடியை பின்புற சுவரில் உள்ள  துவாரம் வழியாகத்தான் தரிசிக்க முடியும்.

பஞ்சவரதர் திருத்தலம்:-

உத்திரமேரூர் ஸ்ரீ வைகுந்தப் பெருமாள் கோவிலில், கர்ப்பக் கிரகத்திலேயே மூலவராக ஸ்ரீவைகுந்தநாதர், சுந்தரவரதர்,கல்யாண வரதர், அச்சுவரதர், அனுசந்திவரதர், என்று ஸ்ரீ மஹாவிஷ்ணு ஐந்து வரதர்களாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.        

நோய் தீர்க்கும் பிரசாதம்:-

ஸ்ரீ முஷ்ணம் பூவராகன் சுவாமி கோவிலில் மூலவருக்கு நாள்தோறும் திருமஞ்சனத்திற்குப் பிறகு "முஸ்தாபி சூரணம்" என்ற மகா பிரசாதம் வழங்கப்படுகிறது.  கோரை கிழங்கு மாவு, சர்க்கரை, நெய், பச்சை கற்பூரம், ஏலப்பொடி ஆகிய பொருட்களால் செய்யப்படும் இந்த பிரசாதம் பல நோய்களை குணப்படுத்தக் கூடியது.  

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே!!.


Comments

Popular posts from this blog

சகல நன்மைகளும் வழங்கும் சாளக்கிராம மந்திரங்கள்:-

ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி:-

வலம்புரி சங்கின் மகிமை